திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் வருகையால் களை கட்டிய கடைவீதி

திருப்பூரில் கடைவீதிகளில் தொழிலாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
திருப்பூர் கடை வீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதை காணலாம்
திருப்பூர் கடை வீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதை காணலாம்
Published on

திருப்பூர்:

பனியன் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்ட போது பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

அதன்பிறகு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன் காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூரை நோக்கி படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பியிருக்கிறார்கள்.

வாரத்தில் 6 நாட்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு தேவையானதை வாங்குவதற்காக திருப்பூர் கடை வீதிகளுக்கு வருவது வழக்கம். குறிப்பாக வடமாநில இளைஞர்கள், இளம்பெண்கள் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள புது மார்க்கெட் வீதி, மாநகராட்சி சந்திப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

அதன்படி நேற்று புதுமார்க்கெட் வீதியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பேன்சி கடைகள், ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதுபோல் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் போர்வை, பை, பேன்சி பொருட்கள் உள்ளிட்டவற்றை தொழிலாளர்கள் வாங்கி சென்றனர்.இதனால் மீண்டும் தொழிலாளர்கள் வருகையால் கடைவீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளது.

அதுபோல் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி முன்புறமுள்ள ரோட்டிலும் இருபுறமும் தற்காலிக பனியன் கடைகளை வியாபாரிகள் அமைத்திருந்தனர். பனியன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com