சேந்தமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 37). இவர் மோகனூர் பகுதியில் மாவு அரைக்கும் எந்திர தயாரிப்பு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில அருள்குமார் குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி நித்யா (30) அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இந்த தற்கொலை குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட அருள்குமாருக்கு நிஷாந்த் (14), நிவாஸ் (9) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com