ஆத்தூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஆத்தூர் அருகே மனைவி இறந்த சோகத்தால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் சுபாஷ் (வயது 27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் சுபாஷ் சோகத்தில் இருந்தார். 

இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுபாஷ் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு இறந்தார். 

இதுகுறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com