நன்னிலம் அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நன்னிலம் அருகே மது குடிப்பதற்கு பணம் தராததால் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம்
விஷம்
Published on

நன்னிலம்:

நன்னிலம் அடுத்துள்ள மகாராஜபுரம் கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 56)தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினரிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். ஆனால் பணம் கொடுக்காததால் மனமுடைந்த ராஜேந்திரன் பூச்சிக்கொல்லி மருந்தை (வி‌ஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

வீட்டில் இருந்தவர்கள்  அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ராஜேந்திரன் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com