ஜோலார்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த இடையம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 30), கூலி தொழிலாளி. இவர் லாவண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லத்திகாஸ்ரீ (6) என்ற மகளும், கோகுல்கிருஷ்ணா (4) என்ற மகனும் உள்ளனர்

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு லாவண்யா குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இதனால் மாரிசெல்வம் மனைவி இறந்த துக்கத்தில் மதுபோதைக்கு அடிமையானார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com