திருவள்ளூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த உட்கோட்டை பகுதியில் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த டி காட்டூர் கிராமம் துரோபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சூரியா (வயது 19) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சூர்யா உடல் நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்லாமல் தன் அறையில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் சூர்யா தன் அறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த சக நண்பர்கள் வேலைக்குச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, மாலை நண்பர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, சூரியா வீட்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த தொழிலாளி சூர்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com