திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருக்கோவிலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூரை அடுத்த கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50) தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உடைய இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அதே ஊரில் வயல் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பழனிவேலுவின் வாயில் இருந்து விஷ மருந்து நாற்றம் அடித்தது. பின்னர் அவர் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து பழனிவேலுவை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com