பேராவூரணியில் தொழிலாளி அடித்து கொலை?- போலீசார் விசாரணை

பேராவூரணியில் உயிரிழந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமாக என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
போலீசார் விசாரணை
Published on

பேராவூரணி:

பழைய பேராவூரணி தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செந்தில்குமார் (வயது 45) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு செந்தில்குமார் குடிபோதையில் பேராவூரணி புதிய பஸ் நிலையத்தில் வந்து தூங்கினார். இந்நிலையில் இன்று அதிகாலை பின் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாரேனும் செந்தில்குமாரை அடித்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com