திருப்பூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

திருப்பூரில் பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வீரபாண்டி:

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 32). இவர் திருப்பூர் வீரபாண்டி பலகார தோட்டம் சுப்பிரமணி காம்பவுண்டில் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி 2 மகள்களுடன் வசித்து வந்தார். அதே பகுதியில் பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று திருப்பூரில் இருந்து பல்லடம் சாலை வழியாக பணிகளை முடித்து கொண்டு மதியம் 12 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயா பஸ் ஸ்டாப் அருகில் வந்த போது திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் கீழே விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரபாண்டி போலீசார். விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டனர். பின்பு தனியார் பஸ்சை ஓட்டி வந்த தாராபுரம் நாதன் பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (35) என்பவரை போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com