

பொங்கலூர்:
பொங்கலூர் அருகே உள்ள அவினாசிபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55 ) தொழிலாளி. இவர் கடந்த 2-ம் தேதி காலை 10.30 மணி யளவில் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் இருந்து கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிழக்கு நோக்கி சென்றுள்ளார். பின்னர் அவினாசிபாளையம் ஊருக்குள் செல்வதற்காக வலதுபுறம் திரும்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த இரண்டு சக்கர வாகனம் மோதியதில் பழனிசாமி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து அவினாசிபாைளயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.