டி.ஜி.புதூர் அருகே மனைவி இறந்த துயரத்தில் தொழிலாளி தற்கொலை

டி.ஜி.புதூர் அருகே உடல் நலக்குறைவால் மனைவி இறந்த துயரத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

டி.என்.பாளையம்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தை கடை மேடு பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 65). இவர் தனது குடும்பத்துடன் ஈரோடு மாவட்டம் டி.ஜி.புதூர் அருகே கொடிவேரி பகுதியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அவருடைய மனைவி ராஜாமணி. இவர் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியின் பிரிவு அய்யாசாமியை மிகவும் வாட்டியது. துயரத்துடனே காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் அய்யாசாமி மனம் உடைந்தார். ஒரு கட்டத்தில் “இனி வாழ்வதை விட சாவதே மேல்” என்ற முடிவுக்கு வந்தார். இதனால் நேற்று முன்தினம் காலை விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அய்யாசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த அய்யாசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com