மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

எலச்சிபாளையம் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 35). தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பாலாமணி. இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் சிதம்பரம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com