சங்கராபுரம் அருகே பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

சங்கராபுரம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

சங்கராபுரம்:

சங்கராபுரம் அருகே உள்ள ஊராங்காணி கிராமத்தை சேர்ந்தவர் சென்னன் (வயது 50) தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிமருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே சென்னனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சென்னன் பரிதாபமாக இறந்தார்.

வயிற்றுவலி தாங்கமுடியாமல் சென்னன் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com