திசையன்விளை அருகே தொழிலாளி மீது தாக்குதல்

திசையன்விளை அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

திசையன்விளை: 

திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் குமார் (வயது 47) தொழிலாளி. இவருக்கும், தெற்கு தெருவை சேர்ந்த செல்வின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் குமார் இட்ட மொழி, புதூர் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வின் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் குமாரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் குமார் வீட்டிற்கு சென்று அங்கிருந்த அவரது மனைவியையும் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக குமார் புகார் செய்தார். 

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து செல்வின் மற்றும் அவரது நண்பரை தேடி வருகிறார்கள். காயம் அடைந்த குமார் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com