திருமண ஆசை காட்டி மாணவியை கர்ப்பமாக்கிய அச்சக தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் திருமண ஆசை காட்டி மாணவியை கர்ப்பமாக்கிய அச்சக தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செல்லியாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரகாஷ் (வயது 19), அச்சக தொழிலாளி.

இவர் தனது உறவினர் முனியம்மாள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவியை திருமணம் செய்வதாக கூறி பிரகாஷ் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் வயிறு வீக்கமாக காணப்பட கட்டி இருக்கும் என்ற எண்ணத்தில் பெற்றோர் திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுபற்றி அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை விசாரித்தனர். அப்போது பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் பிரகாஷை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com