கைது
கைது

பெண்களை படம் பிடித்து ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து பணம் கேட்டு மிரட்டிய டிரைவர் கைது

சித்தூர் பகுதியில் பெண்களை படம் பிடித்து ஆபாசமாக ‘மார்பிங்’ செய்து பணம் கேட்டு மிரட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் அடுத்த பைப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மது என்ற வசந்தகுமார் ரெட்டி (வயது 36), கார் டிரைவர். இவர், திருமணமான பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி நம்பவைத்து, அவர்களை ரகசியமாக செல்போனில் படம் பிடிப்பார்.

அந்தப் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் ரெயில்வே துறையில் பலருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி, லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்து வந்துள்ளார்.

வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அவர் மீது ரொம்பிச்செர்லா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழகத்தில் வேலூர் பஸ் நிலையம் அருகில் நின்றிருந்த மது என்ற வசந்தகுமார் ரெட்டியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

திருமணமான பெண்களை குறிவைத்து, அவர்களை ரகசியமாக படம் பிடித்து, அதை மார்பிங் செய்து, அந்தப் படத்தை அவர்களுக்கே அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறனார்.

அவர் மீது சித்தூர் மாவட்டத்தில் பலமநேர், தவனம்பள்ளி, ஐராலா, ரொம்பிச்சேர்லா ஆகிய போலீஸ் நிலையங்களில் பணமோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com