ஆரணி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை- உதவி கலெக்டர் விசாரணை

ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஆரணி:

ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி கோமதி (வயது 23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுகன்ராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோமதி நேற்று முன்தினம் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட கோமதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயராமன் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com