கல்பாக்கம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கல்பாக்கம் அருகே காதல் திருமணம் செய்த கொண்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஹாஜியார் நகரை சேர்ந்தவர் தினகரன் (வயது30). கார் டிரைவரான இவரது மனைவி யோகலட்சுமி (26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் யோகலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்தார். இதனால் கடும் விரக்தியில் இருந்த அவர் கடந்த 1-ந்தேதி இரவு தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கல்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அச்சுத நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com