தஞ்சை அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

தஞ்சை அருகே மன உளைச்சலில் இருந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம்
விஷம்
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்தவர் வெற்றிச் செல்வன். இவருடைய மனைவி பெயர் பரமேஸ்வரி (வயது 45). இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு மட்டும் திருமணம் ஆகி உள்ளது.

இந்நிலையில் பரமேஸ்வரி கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவருடைய இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளதால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பரமேஸ்வரி அவருடைய வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தற்கொலை செய்து கொண்ட பரமேஸ்வரியின் கணவர் வெற்றிச்செல்வன் (வயது 55) கொடுத்துள்ள புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com