பெரம்பலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெரம்பலூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி திவ்யா(வயது 25). இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது தொடர்பாக பெரம்பலூர் சப்-கலெக்டர் பத்மஜா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com