கொட்டாம்பட்டி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

கொட்டாம்பட்டி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள குருவார்பட்டியை சேர்ந்தவர் தங்கம். இவருடைய மகள் பஞ்சவர்ணம் (வயது30). இவருக்கும் சிலம்பக்கோன்பட்டியை சேர்ந்த பொன்னர் மகன் ராஜா என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ராஜா இடியாப்பம் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பஞ்சவர்ணம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com