ஆம்பூர் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஆம்பூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (28), இவருடைய மனைவி சூர்யா (25). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை சக்திவேல் எழுந்து பார்த்தபோது மனைவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து சூர்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com