செங்கல்பட்டில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ரெட்டப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 42). இவர் கிரைண்டர் பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள லட்சுமிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் சொத்தை அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் தன்னுடையது என கூறி லட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து லட்சுமி மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சான்றிதழை பெற்று வருமாறு கூறி அனுப்பி உள்ளனர்.

அப்போது லட்சுமி மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் லட்சுமியிடம் ரூ.300-ஐ லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி லட்சுமியை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினர். அவரை மீட்ட செங்கல்பட்டு டவுன் போலீசார் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com