அரக்கோணம் அருகே எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

அரக்கோணம் அருகே கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

அரக்கோணம்:

அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். பெயிண்டர். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3-வது மகள் வேனிஷா (வயது 22) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். வேனிஷாவுக்கு கழுத்தின் பின்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இதில் வலியால் அவதிப்பட்டு, மன உளைச்சலில் இருந்து வந்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு சுய நினைவின்றி கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிர் இழந்தார். 

இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com