சேலத்தில் பெண் போலீஸ் திடீர் மரணம்

சேலத்தில் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டு இருந்த பெண் போலீஸ் திடீரென மரணம் அடைந்தார்.
மரணம்
மரணம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே இருப்பாளி சாமுண்டிநகரை சேர்ந்தவர் கார்த்திக். சென்னை அசோக்நகர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 32). இவர், சென்னை தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்ட சத்யா கடந்த மாதம் சொந்த ஊரான இருப்பாளிக்கு வந்தார். 

இதனை தொடர்ந்து அவருக்கு கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சத்யா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். சத்யாவுக்கு 8 வயதில் ரசிகாஸ்ரீ என்ற மகள் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com