பரிசலில் தனியாக சென்ற பெண் பாலியல் பலாத்காரம்- பரிசல் ஓட்டி கைது

பரிசலில் தனியாக சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த பரிசல் ஓட்டியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பென்னாகரம்:

கர்நாடக மாநிலம் ஜாகிரி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் கடந்த 15-ந் தேதி இரவு பஸ் மூலம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மாறுக்கொட்டாய் பகுதிக்கு தனியாக வந்தார். பின்னர் அங்கிருந்து ஒகேனக்கல்லில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதற்காக பரிசல் மூலம் ஆற்றை கடந்துள்ளார்.

அப்போது பரிசலை விட்டு இறங்கும்போது, அவரை பரிசல் ஓட்டி மூர்த்தி (வயது 45) என்பவர் வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பரிசல் ஓட்டி மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com