திருச்செந்தூர் அருகே 9 வயது மகளுடன் இளம்பெண் மாயம்

திருச்செந்தூர் அருகே 9 வயது மகளுடன் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாயம்
மாயம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே நயினார்புரம், சுதந்திரநகரைச் சேர்ந்த சரவணன். இவர் கோவையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 29). இவர்களது மகள் வெண்ணிலா(9). இவர்கள் கோவையில் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதங்களுக்கு முன்பு மகள் வெண்ணிலாவுடன் கோவையிலிருந்து நடுநாலுமூலைக்கிணறில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சரண்யா வந்திருந்தார். தற்போது நிலைமை சீரடைந்ததால் மகளுடன் சரண்யா திருச்செந்தூர் பஸ் நிலையத்திலிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றார். ஆனால் அவர்கள் கோவை போய்ச் சேரவில்லை. எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை.

இது குறித்து சரண்யா தந்தை வெள்ளத்துரை திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிதுரைசிங் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com