தஞ்சையில் ஷேர்ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை ‘அபேஸ்’

தஞ்சையில் ஷேர்ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமாநகரை சேர்ந்தவர் சோலையப்பன். இவரது மனைவி பத்மாவதி (வயது 65).

சம்பவத்தன்று இவர் தனது பேத்தியுடன் ஒரு ஷேர்ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சை சீனிவாசம்பிள்ளை சாலையில் உள்ள ரெயில்வே கீழ்பாலத்தில் ஷேர்ஆட்டோ சென்றபோது தனது கைப்பை காணாதது கண்டும், அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை யாரோ மர்மநபர் அபேஸ் செய்து விட்டதும் தெரிந்து திடுக்கிட்டார்.

உடனடியாக ஷேர்ஆட்டோவில் இருந்த சக பயணிகளிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் கைப்பையை பார்க்கவில்லை என கூறினர். இதையடுத்து ஆட்டோவில் இருந்து இறங்கி பல இடங்களில் கைப்பையை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு நகையை அபேஸ் செய்தது யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com