பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவர் கைது

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

கீரனூர்:

கீரனூர் கள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 45). சம்பவத்தன்று இவர் நேற்று முன்தினம் மதியம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் இறங்கியதால் ஒருவன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவனை பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவன் திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 44) என தெரியவந்தது. இதனைடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது திருட்டு சம்பந்தமாக 75 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com