நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலி

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு பெண் உயரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

நெல்லை:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் 26-ந்தேதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மாரியம்மாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவருக்கு கரும்பூஞ்சை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கரும்பூஞ்சைக்கு பலியாகி இருந்தனர்.

இன்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு பெண் உயரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கருப்பு பூஞ்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com