ஈரோட்டில் விஷம் குடித்து பெண் தற்கொலை

ஈரோட்டில் கணவர் இறந்த துயரத்தில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி 5-வது வீதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி பானுமதி (வயது 52). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பானுமதி கடந்த 2 ஆண்டுகளாக தனது மகனுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். குமாரசாமி ஈரோட்டில் இருந்து உள்ளார். கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

பானுமதி அமெரிக்காவில் இருந்து திரும்புவதற்குள் குமாரசாமியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்து முடித்தனர். இந்தநிலையில் கணவரை இழந்த துயரத்தில் காணப்பட்ட பானுமதி கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்தபோது விஷத்தை எடுத்து குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பானுமதி இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com