குழந்தையை தாய் வீட்டுக்கு அனுப்பியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

பொள்ளாச்சியில் குழந்தையை தாய் வீட்டுக்கு அனுப்பியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியை கணவர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

பொள்ளாச்சி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பிரியங்கா (26). இவர்கள் கடந்த 5 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ராஷ்மிகா என்ற 4 வயது மகள் உள்ளார். இந்த நிலையில் பிரியங்காவின் தாய் நேற்று வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் ராஷ்மிகாவை தாயுடன் நெகமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.இது சுப்பிரமணிக்கு பிடிக்கவில்லை. மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியதை கேட்டு கண்டித்தார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனவேதனை அடைந்த பிரியங்கா விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com