பூதலூர் அருகே தீயில் கருகி பெண் பலி- உதவி கலெக்டர் விசாரணை

பூதலூர் அருகே கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ்ப்பிடித்ததில் பெண் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பூதலூர் அருகே உள்ள அய்யனாபுரம் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது32). விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (25). சம்பவத்தன்று இவர் கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ்ப்பிடித்தது.

இதில் படுகாயமடைந்த அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com