இரணியல் அருகே பெண் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை

இரணியல் அருகே பெண் வங்கி அதிகாரி வீட்டில் கதவை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை
கொள்ளை
Published on

இரணியல்:

இரணியல் அருகே குருந்தன்கோடு ஆலன்விளையைச் சேர்ந்தவர் பிரபாகரன், (வயது 38).

இவர் சென்னையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிந்துஜா. இவர், சாத்தான்குளத்தில் உள்ள வங்கி ஒன்றில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வாரத்திற்கு ஒருமுறை சிந்துஜா வீட்டிற்கு செல்வார். இவர்களது வீட்டை உறவினர் பராமரித்து வந்தார். நேற்று மாலை அவர் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு நவீன எந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பொருட்கள் சிதறிக்கிடந்தது. அதில் இருந்த பொருட்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இது குறித்து இரணியல் போலீசுக்கும், பிரபாகரன், சிந்துஜாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

பிரபாகரன், சிந்துஜா வந்த பிறகுதான் நகை, பணம் திருடப்பட்டது குறித்த விவரம் தெரியவரும்.

கொள்ளையர்கள் கணவன்- மனைவி இருவரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவங்களில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்புஇருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

வீட்டில் கைப்பற்றப்பட்ட கைரேகைகளுடன் பழைய கொள்ளையர்களின் கைரேகைகளை ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com