அனுமதியின்றி மது விற்றதாக குமரியில் 157 வழக்குகள் பதிவு

அனுமதியின்றி மது விற்றதாக குமரியில் 157 வழக்குகள் பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 916 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தீபாவளி தினத்தன்று சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும், அந்தந்த சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலைய போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் கோட்டார், இரணியல், அருமனை, தென்தாமரைக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலைய போலீசாரும், நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும் 157 வழக்குகள் பதிவு செய்தனர். சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 916 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக அந்தந்த போலீஸ் நிலைய போலீசாரால் மாவட்டம் முழுவதும் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com