மன்னார்குடியில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா?- வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மன்னார்குடியில் மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் மன்னார்குடி நியூ பைபாஸ் சாலையை படத்தில் காணலாம்.
மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் மன்னார்குடி நியூ பைபாஸ் சாலையை படத்தில் காணலாம்.
Published on

மன்னார்குடி:

மன்னார்குடி புறநகர் நகரின் பகுதியின் முக்கியமான சாலை நியூ பைபாஸ் சாலை ஆகும். திருமகோட்டை சாலை, மதுக்கூர் சாலை மற்றும் வடசேரி சாலை ஆகியவற்றை இந்த சாலை இணைக்கிறது. இதில் திருமக்கோட்டை சாலை, மதுக்கூர் சாலை இடையே உள்ள சாலை தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையில் வழியாக செல்ல மிகுந்த சிரமம் அடைந்தனர்.

மேலும் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com