கணவர் பேசாததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கோவையில் கணவர் பேசாததால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கோவை:

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( வயது 32). இவர் ஒடிசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி சசிகலா தேவி (28). இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கணவர் ஒடிசாவில் வேலை செய்து வருவதால் சசிகலாதேவி அன்னூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் பிரவீன் குமார் விடுமுறையில் மனைவி வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் சசிகலா தேவியிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் சசிகலாதேவி மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com