தஞ்சையில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை?

தஞ்சையில் மனைவி இறந்த சோகத்தில் காணப்பட்ட கணவர் வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மேலவீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 66). இவரது மனைவி மல்லிகா (60). இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மல்லிகா இறந்தார். இதனால் மனைவி இறந்த சோகத்தில் கிருஷ்ணமூர்த்தி காணப்பட்டார். மிகுந்த மனவேதனையில் இருந்தார்.

இந்நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி வீட்டில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com