சென்னையில் மக்கள் புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்அப்’ குழு அறிமுகம்

சென்னை கிழக்கு மண்டல பகுதியில் தனியே வசிக்கும் முதியோர் அனைவரையும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோருக்கு ஏதாவது தேவைப்பட்டால் உடனே தெரிவிக்கலாம்.
வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்
Published on

சென்னை:

சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை கிழக்கு மண்டல பகுதியில் தனியே வசிக்கும் முதியோர் அனைவரையும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோருக்கு ஏதாவது தேவைப்பட்டால் உடனே தெரிவிக்கலாம்.

இதுபோல் மற்றொரு வாட்ஸ்அப் குழுவில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். இவற்றை தொடர்ந்து கண்காணிக்கும் போலீசார் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com