5,058 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

முதுகுளத்தூரில் 5,058 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கியபோது எடுத்தபடம்.
நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கியபோது எடுத்தபடம்.
Published on

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 5,058 பயனாளிகளுக்கு ரூ.30 கோடியே 92 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

முதல்-அமைச்சர் விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து அதற்கான ரசீது வழங்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மேலும் காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதேபோல தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை புனரமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும் மழை நீர் வீணாகாமல் சேமிக்க குடிமரா மத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மணிகண்டன்,சதன் பிரபாகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சங்க தலைவர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, சுந்தரராஜன், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியதலைவர் தர்மர், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, சப்-கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், முதுகுளத்தூர் தாசில்தார் முருகேசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சாவித்திரி, மங்களேசுவரி, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, அ.தி.மு.க. நகர் செயலாளர் சங்கரபாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் வக்கீல் கோவிந்தராமு, வக்கீல் முனியசாமி, ஊராட்சி தலைவர் செந்தில்குமார், ெஜயலலிதா பேரவை தலைவர் கதிரேசன், முன்னாள் கவுன்சிலர் தூரி மாடசாமி, ஊராட்சி தலைவர்கள் சண்முகவல்லி தர்மராஜ் பாண்டியன், முருகவேல், தங்கப்பாண்டியன், கணவள்ளி முத்துவேல், ரவிச்சந்திரன், சாத்தாயி திருநாவுக்கரசு, ஜோதிமுணிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com