முசிறியில் காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

முசிறியில் திருமண செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

முசிறி:

முசிறி பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் கார்த்திக்கும்(வயது 28), மருங்காபுரி பகுதியை சேர்ந்த நர்சிங் மூன்றாம் ஆண்டு மாணவி பவானியும்(20) கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் எங்கே நம்மை பிரித்து விடுவார்களோ என்று பயந்த அவர்கள் முசிறி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். 

இதனையடுத்து இருதரப்பு பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது பவானியின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், கார்த்திக் பெற்றோர் அவர்களை ஏற்பதாக தெரிவித்தன்பேரில் அவர்களுடன் மணமக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com