எருமப்பட்டி அருகே பலத்த மழைக்கு சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

பலத்த காற்று காரணமாக வேப்பமரம் மாட்டு கொட்டகையின் மீது திடீரென விழுந்ததில் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்து பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலி
பலி
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்தநிலையில் எருமப்பட்டி அருகே தேவராயபுரம் ஊராட்சி சிங்களம்கோம்பை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பார்வதி (45). இவர் நேற்று தனது தோட்டத்தில் கூலி ஆட்களுடன் வேலை செய்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பார்வதி அவர்களுக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றார். அப்போது பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த வேப்பமரம் மாட்டு கொட்டகையின் மீது திடீரென விழுந்தது. இதனால் மாட்டுக்கொட்டகை சுவர் இடிந்து விழுந்து பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவருடன் செல்லி பாளையத்தை சேர்ந்த பெருமாள் மனைவி சந்திரா (60), கலைச்செல்வன் மனைவி அகிலா (42) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய 2 பேரையும் உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com