வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்- தலைமை தேர்தல் ஆணையர்

கொரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
Published on

தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக 2 நாட்கள் அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தற்போதைய தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ந்தேதியுடன் முடிவடைகிறது.

* தமிழகத்தில் எப்போதும் போல் வரும் தேர்தலிலும் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கிறோம்.

* புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த தேர்தலில் திட்டமிட்டுள்ளோம்.

* ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

* வாக்குப்பதிவு முடிந்த 2 நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு தொடர்பாக கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

* 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பது குறித்து  ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது.

* கொரோனா காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.

* தமிழக சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக துணை ராணுவம் அனுப்பவும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

* தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு மையங்கள் 68,000யில் இருந்து 93,000 உயர்த்தப்பட்டுள்ளது.

* வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். சிறப்பு பார்வையாளர்களாக இரண்டு பேர் நியமிக்கப்படுவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com