விருதுநகர் அருகே மனைவியை மிரட்டிய போலீஸ் ஏட்டு மீது வழக்கு

விருதுநகர் அருகே மனைவியை மிரட்டிய போலீஸ் ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

விருதுநகர்:

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 33). இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் போலீஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு சரவணகுமாருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

இந்தநிலையில் ஏட்டு சரவணகுமார் அதே போலீசில் பணியாற்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக சுகன்யாவுக்கு தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகன்யா இதனை கண்டித்து உள்ளார். இதையடுத்து போலீஸ் ஏட்டு சரவணகுமார் அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பைவிட மறுத்து சுகன்யாவை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு கட்டாயப்படுத்தி வந்தாராம். 

சுகன்யா இதற்கு மறுத்ததால் அவரை சித்ரவதை செய்ததுடன் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமார் விருதுநகரில் உள்ள சுகன்யாவின் வீட்டிற்கு வந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தியதுடன் தகராறு செய்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சுகன்யா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போலீஸ் ஏட்டு சரவணகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com