விராலிமலை அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

விராலிமலை அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

விராலிமலை:

விராலிமலை தாலுகா பூதகுடி இ.மேட்டுப்பட்டி அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலை ஓரத்தில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com