வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை- 6 பேர் கைது

வில்லிவாக்கத்தில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

செங்குன்றம்:

சென்னை அயனாவரம் வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர் மதன்(வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

தீபாவளி அன்று இரவு இவரது நண்பரான ஆட்டோ டிரைவர் பிரபா என்பவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதன், பின்னர் தனது வீட்டுக்குச்செல்ல ஆட்டோவில் ஏற முயன்றார்.

அப்போது அங்கு வந்த 13 பேர் கொண்ட கும்பல், மதனை சுற்றி வளைத்தது. உடனே அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் மதனை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த மதன், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின்பால் சுதாகர் மேற்பார்வையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வில்லிவாக்கத்தை சேர்ந்த ஆடு சரவணன்(26), ரஞ்சித்(23), நவீன்குமார்(20), பாலாஜி(23), தீனா(22), மாவா கார்த்திக்(21) ஆகிய 6 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com