வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர் பலி

வில்லியனூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து பலி
விபத்து பலி
Published on

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே உள்ள ஒதியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி (வயது 21). நேற்று முன்தினம் இவர், தனது நண்பர் திரிவேணி நகரை சேர்ந்த லோகு (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஒதியம்பட்டு 4 ரோடு சந்திப்பில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த சந்திரமவுலியையும், லோகுவையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே சந்திரமவுலி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com