இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த குமரி எம்பி

கப்பல் ஊழியர்கள் மூன்று பேரும் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
விஜய் வசந்த் எம்பி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
விஜய் வசந்த் எம்பி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
Published on

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த 3 இந்தியர்கள், எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் பணி செய்யும் ஊழியர்கள். இவர்களது கப்பல் மே மாதத்தில் தீ விபத்துக்குள்ளாகி மீட்க முடியாமல் கடலில் கைவிடப்பட்டது. கப்பல் ஊழியர்கள் மூன்று பேரும் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த விசாரணை முடிவுற்ற பின்னரும் விடுதலை ஆகாமல் இருக்கும் மூன்று இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சந்தித்து மனு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com