வெள்ளகோவிலில் மதுவிற்ற 2 பேர் கைது

வெள்ளகோவில் பகுதியில் மதுவிற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டத்துக்குப் புறம்பாக உரிய அரசு அனுமதியின்றி விற்பனைக்காக மது பாட்டில்கள் வைத்திருந்த விவேகானந்தன் (வயது 23), குப்புசாமி (27) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்த 17 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com