வேலாயுதம்பாளையத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

வேலாயுதம்பாளையத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை படத்தில் காணலாம்.
சாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை படத்தில் காணலாம்.
Published on

வேலாயுதம்பாளையம்:

வேலாயுதம்பாளையம் திருவள்ளுவர் கிழக்கு சாலையின் மேல் பகுதியில் உள்ள மின்மாற்றி முன்பு அப்பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் வாரகணக்கில் அள்ளப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் சாப்பிட்ட இலைகள், வாழைமரங்கள் ஆகியவை சேர்ந்து கிடக்கிறது. மேலும் சில நேரங்களில் அந்த குப்பைகளை யாரவது தீ வைத்து எரிந்து விடுகிறார்கள். இதனால் அப்பகுதியில் கரும்புகை மற்றும் துர்நாற்றம் அதிகமாக வீசுகிறது.

இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் தொடர் இருமல், காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com